பெங்களூரு: கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் குறிப்பிட்ட சமூகம் குறித்து சர்ச்சைக்குரிய புகைப்படம் நேற்று(ஏப்ரல் 16) சமூகவலைதளங்களில் வெளியாகியது. அந்த பதிவை வெளியிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நூற்றுக்கணக்கானோர் ஹூப்ளி காவல்நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மற்றொரு தரப்பினரும் அங்கு வந்ததால், இருதரப்பினரிடையே வன்முறை வெடித்தது.
அப்போது ஒரு கும்பல் காவல்நிலையம் மீது சரமாரிய கல்வீசித் தாக்குதலில் நடத்தியது. இதனால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்தனர். இந்த தாக்குதலில், 12 போலீசார் காயமடைந்தனர். 40 பேர் கைது செய்யப்பட்டனர்.