தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாணவிக்கு வலுக்கட்டாய சோதனை: தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது - தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது

கர்நாடகாவில் பள்ளிக்கு மாணவி கைப்பேசியை எடுத்துவந்ததாகக் கூறி, அவருடைய ஆடைகளைக் களையச் சொல்லி அவமதித்த தலைமை ஆசிரியர் போக்சோவில் கைதுசெய்யப்பட்டார்.

தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது
தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது

By

Published : Jan 8, 2022, 8:03 PM IST

கர்நாடகா:கனங்கூர் கிராமப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மாணவி கைப்பேசி எடுத்து‌ச் சென்றதால் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சோதனை என்ற பெயரில்‌ வலுக்கட்டாயமாக மாணவியின் ஆடைகளைக் களைய செய்துள்ளார்.

இதனால் மாணவி மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி வருத்தில் இருந்துள்ளார். இதனை கவனித்த மாணவியின் பெற்றோர் மாணவியிடம் விசாரித்துள்ளனர். இதையடுத்து மாணவி பள்ளியில் நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார்.

இதையடுத்து, மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இந்தப் புகாரின்பேரில் தலைமை ஆசிரியர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் காவல் துறையினர் இது குறித்து தலைமை ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவரும் நடந்ததை ஒப்புக்கொண்டதால் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க : ஜாதகம் பார்க்கச் சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை: கோயில் பூசாரி கைது

ABOUT THE AUTHOR

...view details