வாழ்க்கையில் எல்லா பெற்றோரும் தன் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்றே நினைப்பார்கள். தம் குழந்தை படிப்பில் கெட்டிக்காரனாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஆனால் எல்லா குழந்தைகளாலும் படிப்பில் சிறந்து விளங்க முடிவதில்லை.
படிப்பில் சிறந்து விளங்க முடியாதவர்களால் வாழ்க்கையில் வெற்றி பெறமுடியாமல் போகாது அல்லவா. அதுபோலத்தான் ஷோஷன் பந்தாரியின் வாழ்க்கையும். 17 வயதான இந்தச் சிறுவன் தனது பள்ளிப் படிப்பை முடிக்கமுடியாமல் தனது தந்தையின் முடி திருத்தும் கடையில் வேலை செய்யத் தொடங்கியுள்ளார். ஆனால் அந்தப் பணியில் ஆர்வமில்லாத காரணத்தால் அவருக்கு முடி திருத்தும் தொழிலில் ஈடுபாடு இல்லாமல் போய்விட்டது.
அதற்கு மாற்றாக தந்தை கடைக்கு அருகே உள்ள பைக் மெக்கானிக் கடை மீது சிறுவனுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஷோஷன் பந்தாரி பைக் மெக்கானிக் தொழிலை கற்றுக்கொண்டார். தொழில் கற்றுக்கொண்ட அவர் பைக் குறித்தான தகவல்களை திரட்டி மூலப் பொருள்களை வைத்து தனது திறமையால் புதிய பைக் ஒன்றை வடிவமைத்துள்ளார்.