தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்திரா காந்திக்கு மட்டுமல்ல காங்கிரசுக்கும் ComeBack கொடுத்த தொகுதி! எது தெரியுமா? - Karnataka Election

இந்திரா காந்தியின் அரசியல் பயணத்திற்கு திருப்புமுனையாக அமைந்த சிக்மகளூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கும் அமையுமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.

Congress
Congress

By

Published : May 13, 2023, 8:13 PM IST

ஐதராபாத் : 23 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்மகளூர் தொகுதியை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி உள்ளது. 1978ஆம் ஆண்டு அரசியல் அஸ்தமனத்தைக் காண இருந்த இந்திரா காந்திக்கு திருப்புமுனையை கொடுத்த சிக்மகளூர் தொகுதியில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி கம்பேக் கொடுத்து உள்ளது.

அரசியல் அஸ்தமனத்தைக் காண இருந்த இந்திரா காந்திக்கு திருப்புமுனையாக அமைந்த சிக்மகளூர் தொகுதி, அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு திருப்பங்களை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டமன்றத்திற்கு கடந்த மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.

இன்று (மே. 13) வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 136 இடங்களைக் கைப்பற்றி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. பாஜக 65 இடங்களைக் கைப்பற்றி எதிர்க் கட்சியாக உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற தொகுதிகளில் சிக்மகளூர் தொகுதியில் பெற்ற வெற்றி சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

சிக்மகளூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சிடி ரவியை விட 5 ஆயிரத்து 926 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் எச்.டி. தம்மையா வெற்றிபெற்றார். 2004ஆம் ஆண்டு முதல் பாஜக வேட்பாளர்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த சிக்மகளூர் தொகுதியில் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

அதேநேரம், சிக்மகளூர் தொகுதி எப்போதும் காங்கிரஸ் கட்சிக்கு சிறப்பு வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. 45 ஆண்டுகளுக்கு முன்னர் எமர்ஜென்சி விவகாரத்தால் படுதோல்வி நிலைக்குச் சென்று அரசியல் அஸ்தமனத்தைக் காண இருந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, சிக்மகளூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மாநிலத்தில் ஜனதா தளம் நன்கு வேரூன்றி இருந்த போதும் அக்கட்சிக்கு எதிராக வரலாற்றுச்சிறப்பு மிக்க வெற்றியை இந்திரா காந்தி பெற்றார்.

சிக்மகளூர் தொகுதியில் வெற்றி பெற்ற நேரம், தேசிய அரசியலில் இந்திரா காந்தியின் செயல்பாடு சீரிய அளவில் இருந்தது. அந்த அளவுக்கு இந்திரா காந்திக்கு அரசியல் கம்பேக் கொடுத்த தொகுதியாக சிக்மகளூர் தொகுதி அமைந்தது. இந்நிலையில் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பின் அதே தொகுதியை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி உள்ளது.

தற்போது இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எச்.டி. தம்மையா 85 ஆயிரத்து 54 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று உள்ளார். காங்கிரஸ் தரப்பில் முதலமைச்சர் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், நாளை (மே.14) அதுகுறித்த எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

முதலமைச்சர் பதவிக்கு டி.கே. சிவகுமார், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோரிடையே கடும் போட்டி நிலவும் நிலையில், அடுத்த முதலமைச்சர் யார் என்பது நாளை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க :பாஜகவின் இந்துத்துவா கொள்கைக்கு தோல்வி - தேர்தல் வியூகத்தை மாற்றுமா பாஜக!

ABOUT THE AUTHOR

...view details