தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மீண்டும் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பியாக தேர்வாகிறார் நிர்மலா சீதாராமன்?

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் கர்நாடகாவிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

KARNATAKA
KARNATAKA

By

Published : May 14, 2022, 9:50 PM IST

கர்நாடகா: பாஜக மூத்த தலைவரும் மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன், கடந்த 2014-ம் ஆண்டு ஆந்திராவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு, தேர்வு செய்யப்பட்டார். பின்னர் கடந்த 2016-ம் ஆண்டில் கர்நாடகாவிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து கர்நாடகாவில் நான்கு மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், கர்நாடகாவில் நடைபெற்ற பாஜக உயர்மட்ட குழுக் கூட்டத்தில், மாநிலங்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் மாநிலங்களவை தொகுதிக்கான வேட்பாளராக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநில பாஜக துணைத் தலைவர் நிர்மல் குமார் சுரானா உள்ளிட்ட ஐந்து பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையிலிருந்து வேட்பாளர்களை பாஜக தலைமை இறுதி செய்யும் என கூறப்படுகிறது. இந்த பரிந்துரை மூலம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் கர்நாடகாவிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேந்தெடுக்கப்பட இருப்பது உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க: சிறைகளில் விஐபி சலுகை ரத்து- பஞ்சாப் அரசு அதிரடி!

ABOUT THE AUTHOR

...view details