மங்களூரு:கென்யா நாட்டைச் சேர்ந்த 65 வயது பெண்மணி, இதயத்தில் உள்ள மிட்ரல் வால்வு(mitral valve) பகுதியில் ஏற்பட்ட சீரரற்ற ரத்த ஓட்டத்தின் காரணமாக இதய நோய் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு அகமதாபாத் மருத்துவமனையில் அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டு செயற்கை வால்வு பொருத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் 8 ஆண்டுகள் கழிந்த நிலையில், செயற்கை வால்வு செயலிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தீவிர மூச்சுத் திணறல் மற்றும் அதிதீவிர ரத்த அழுத்த பிரச்னைகளால் மூதாட்டி அவதிப்பட்டு வந்துள்ளார். மீண்டும் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 2-வது முறையாக அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.
இரண்டாவது முறையாக பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டால், உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படக்கூடும் என கருதப்பட்ட நிலையில், மாற்று சிகிச்சைக்காக மங்களூருவில் உள்ள இந்தியானா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்தியானா மருத்துவமனை மருத்துவர்கள் மூதாட்டியின் உடல்நிலையை பரிசோதித்த நிலையில், பைபாஸ் சர்ஜரி இல்லாமல் இதய வால்வு அறுவை சிகிச்சை செய்வது குறித்து பரிந்துரைத்துள்ளனர்.