பெங்களூரு:கன்னட நடிகர் சேத்தன் 'கந்தாரா' திரைபடத்தில் சித்தரிக்கப்பட்ட 'பூத கோலா நடனம்' "இழிவான" கருத்துக்களை கூறியதாக அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. . அதனடிப்படையில் சேத்தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் கன்னட மொழியில் வெளியாகி பல மாநிலங்களில் பெரும் வரவேற்பை பெற்ற படம் காந்தாரா. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்தார். இப்படம் கன்னட மொழியில் வெற்றியடைந்த பின்னர் தமிழ், தெலங்கு உள்ளிட்ட சில மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. இப்படத்தில் இடம்பெறும் பூத கோலா நடனம் மலைப்பகுதியில் வாழும் பழங்குடியன மக்களின் மரபு நடனமாகும். பூத கோலா என்பது பழங்குடியனரின் வழிபாட்டு முறையாகும். ஆனால், காந்தாரா படத்தில் இயக்குநர் ரிஷப் ஷெட்டி பூத கோலா நடனத்தை இந்து கலாச்சாரம் என்று திரித்து படம் எடுத்துள்ளார் என்று சேத்தன் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
காந்தாரா பட விவகாரம் - கன்னட நடிகர் மீது வழக்குப்பதிவு
காந்தாரா படத்தில் காட்டப்பட்ட பூத கோலா நடனம் இந்து கலாச்சார அடையாளம் இல்லை என்று விமர்சனம் செய்த கன்னட நடிகர் சேத்தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கருத்து இந்து மதத்தை இழிவுபடுத்தியதாகவும், சாதிகளுக்கு இடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தியதாகவும் பல இந்து அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். சேத்தனின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து அவர் மீது பெங்களூரு சேஷாத்ரிபூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளதாகவும், இன்று (அக்-23) நீதிமன்றத்தில் சேத்தன் ஆஜராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஊடகங்களில் தலை காட்டாதது ஏன்? - தும் ஹி ஹோ பாடகரின் விளக்கம்