தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தெலங்கானா காங்கிரஸ் தலைவர் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு: கர்நாடக காவல்துறை அதிரடி! - பெங்களூரு செய்திகள் தமிழில்

Rape case against Congress Leader: ஹைதராபாத் நாராயணப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கும்பம் சிவகுமார் ரெட்டி மீது பாலியல் வன்புணர்வு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு கப்பன் பார்க் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தெலங்கானா காங்கிரஸ் தலைவர் மீது பாலியல் வன்புணர்வு வழக்கை பதிவு செய்த கர்நாடகா காவல்துறையினர்
karnataka-police-file-rape-case-against-congress-leader-from-telangana

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 10:31 PM IST

பெங்களூரு: தெலங்கானா காங்கிரஸ் தலைவர் மீது பாலியல் வன்புணர்வு வழக்கைப் பதிவு செய்த கர்நாடகா காவல்துறையினர். ஹைதராபாத்நாராயணப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கும்பம் சிவகுமார் ரெட்டி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஹைதராபாத்நாராயணப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கும்பம் சிவகுமார் ரெட்டி பெங்களூருவில் உள்ள தனியார் உணவகத்தின் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு கப்பன் பார்க் காவல்நிலையத்தில் கும்பம் சிவகுமார் ரெட்டிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:காதலியை பிரஷர் குக்கரால் தலையில் அடித்து கொலை செய்த இளைஞர்; பெங்களூருவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

2018 சட்டமன்ற தேர்தலில் ஹைதராபாத்நாராயணப்பேட்டை பகுதியில் கும்பம் சிவகுமார் ரெட்டி போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் மீது ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாகுட்டா காவல் நிலையத்தில் மோசடி மற்றும் பாலியல் வன்புணர்வு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கும்பம் சிவகுமார் ரெட்டி பாதிக்கப்பட்ட பெண்ணை ஜந்து நட்சத்திர உணவகத்துக்கு வரவழைத்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் மேலும் கேமரா மூலம் நிர்வாண படங்கள் எடுத்து தன்னை தொடர்ந்து மிரட்டிவருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க:திருடன் என நினைத்து இளைஞர் அடித்துக் கொலை - மகாராஷ்டிராவில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details