தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடகா : 'சிவமணி' என மகனுக்கு பெயர் சூட்டிய இஸ்லாமிய தம்பதி! - கர்நாடகா

கர்நாடகாவில் தம்பதி ஒன்று தனது மகனுக்கு சிவமணி எனப் பெயர் சூட்டியுள்ளனர்.

Shivamani
Shivamani

By

Published : Apr 2, 2022, 1:59 PM IST

துமகூரு : சிவகுமார சுவாமிகளின் 115ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இஸ்லாமிய தம்பதி ஒன்று தனது மகனுக்கு சிவமணி எனப் பெயர் சூட்டியுள்ளனர்.

சித்தகங்கா மடாதிபதி மறைந்த சிவக்குமார சுவாமிகளின் 115ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சிவக்குமார சுவாமி அன்னதான சேவா சார்பில் 115 குழந்தைகளுக்கு சிவக்குமார சுவாமிகளின் நினைவாக பெயர் சூட்டும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொண்ட இஸ்லாமிய தம்பதியான ஷாஹிஸ்தா- ஸமீர் ஆகியோர் தங்கள் குழந்தைக்கு சிவமணி எனப் பெயர் சூட்டினர். இது குறித்து அத்தம்பதி கூறுகையில், “நாங்கள் சிவக்குமார சுவாமிகளின் அனைவரும் சமம் என்ற கொள்கையை பின்பற்றுகிறோம்.

சுவாமிஜியின் வார்த்தைகள் எங்களது வாழ்க்கையை வழிநடத்துகின்றன. அவரின் சித்தார்த்தங்களின் அடிப்படையில் நாங்கள் வாழ்கிறோம்” என்றார். கர்நாடக மாநிலம் சித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவக்குமார சுவாமிகள் 2019ஆம் ஆண்டு தனது 111ஆவது வயதில் மறைந்தார்.

லிங்காயத்துகளின் நடமாடும் கடவுளாக பார்க்கப்பட்ட ஸ்ரீ சிவக்குமார சுவாமிகளுக்கு பத்ம பூஷண் விருது 2015ஆம் ஆண்டு, 2017ஆம் ஆண்டு கர்நாடக ரத்னா விருதும் வழங்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : மதத்தைக் கடந்த மனிதநேயம்: மூதாட்டிக்கு இஸ்லாமிய சகோதரர்கள் இறுதிச்சடங்கு!

ABOUT THE AUTHOR

...view details