உத்தர கன்னடா (கர்நாடகம்):திபெத்திய துறவி கிஷே ஃபன்ட்ஸோக், செப்டம்பர் 9ஆம் தேதி உத்தர கன்னடா மாவட்டத்தின் முண்டகோடு தாலுகாவின் திபெத்திய காலனியில் உள்ள ஷார் கேடன் மடாலயத்தில் இறந்தார்.
அவரது உடலில் இருந்து ஆன்மா வெளியேறுவதற்காக 14 நாட்கள் அவரது உடல் தகனம் செய்யப்படாமல் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. அவருக்கு வயது 90 ஆகும்.
திபெத்திய புத்த மத விதிகளின்படி, எந்த ஒரு மூத்த துறவியும் இறந்தால், அவரது உடலில் இருந்து திரவம் வெளியேறும் வரை அல்லது துர்நாற்றம் வீசும் வரை அவரது ஆன்மா உடலில் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
திபெத்திய துறவியின் உடல், 14 நாட்களுக்குப் பிறகு கர்நாடக மடத்தில் தகனம் அவர் உடல் வைத்திருக்கும் அறையை, மூத்த புத்தத் துறவிகள் அவ்வப்போது சென்று பார்த்து வணங்கி வருவர். இந்நிலையில் 14 நாட்கள் கழித்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. மடத் துறவிகள் சூழ இறந்த துறவிக்கு கடைசி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதையும் படிங்க:நல்ல செய்தி - பெண் காவலர்களின் பணிநேரம் 8 மணிநேரமாக குறைப்பு