பெங்களூரு:கர்நாடகா மாநிலம் பெல்காம் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் பாட்டீல் அரசு திட்டங்களின் ஒப்பந்ததாரராக இருந்தார். இதனிடையே, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா, தன்னிடம் சாலைகள் அமைக்கும் ஒப்பந்தத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய 40 விழுக்காடு கமிஷன் கேட்பதாக புகார் தெரிவித்தார்.
இதுகுறித்து, பிரதமர் மோடிக்கும், மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் ஆகியோருக்கும் கடிதம் ஒன்றை அனுப்பினார். இந்த நிலையில், உடுப்பியில் உள்ள விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதற்கு முன்பாக, சந்தோஷ் தனது நண்பர் ஒருவருக்கு அனுப்பிய கடைசி குறுஞ்செய்தியில், தன் மரணத்துக்கு அமைச்சர் ஈஸ்வரப்பா மட்டுமே காரணம் என்று குறிப்பிட்டதாக தகவல் வெளியாக சர்ச்சையை ஏற்படுத்தியது.