பெங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோ திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 2 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து மங்களூரு காவல் ஆணையர் என் சசிகுமார் கூறுகையில், மங்களூருவின் கண்கனாடி பிஎஸ் பகுதியில் மாலை 5 மணியளவில் விபத்து ஏற்பட்டுள்ளது. ஆட்டோ சென்றுகொண்டிருந்தபோது தீப்பற்றியதால் ஓட்டுநரும், பயணியும் படுகாயமடைந்தனர். முதல்கட்ட தகவலில் பயணி எடுத்துச்சென்ற தீப்பற்றக்கூடிய பொருள்களாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கர்நாடகாவில் தீப்பற்றி எரிந்த ஆட்டோ... தமிழ்நாடு எல்லையில் பாதுகாப்பு தீவிரம்... - மங்களூருவில் ஆட்டோ வெடிவிபத்து
கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோ தீப்பற்றி எரிந்ததில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
அவர் யார் என்பது குறித்து விசாரணை நடந்துவருகிறது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு கர்நாடக-தமிழ்நாடு எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தவும், சோதனையை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பாதுகாப்பு நடவடிக்கைகள் நடந்துவருகிறது. அதேபோல எல்லையையொட்டியுள்ள தங்கும் விடுதிகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டுவருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:ஜார்க்கண்டில் குவாரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி?