கர்நாடகா மாநிலம் சிக்மகளூரில் உள்ள மராசானிகே கிராமத்தில், கரோனா தொற்று பாதிப்புக்குள்ளான அண்ணனை, அவரது தம்பியே அடித்துக்கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
கரோனா பாதிக்கப்பட்ட அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி! - பெங்களூரு அண்ணனை கொன்ற தம்பி
பெங்களூரு: கரோனா தொற்று பாதிப்புக்குள்ளான அண்ணனை, அவரது தம்பி கொடூரமாகத் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![கரோனா பாதிக்கப்பட்ட அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி! Karnataka:](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11785805-148-11785805-1621198429702.jpg)
கரோனா
கடந்த சில நாள்களுக்கு முன்பு, 45 வயதான மகாவீருக்கு, கரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், பூரணமாகக் குணமடைவதற்கு முன்பே, மாகாவீர் வீட்டிற்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால், அவருக்கு, அவரது தம்பிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில், தம்பி அண்ணனைக் கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளார். இதுகுறித்து கலாசா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.