பெங்களூரு: கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டத்தை சேர்ந்த சமியுல்லா என்பவர் நேற்று (ஆகஸ்ட் 18) தனது மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டார். இந்த தகவலை அறிந்த துமகுரு போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து துமகுரு போலீசார் தரப்பில், சமியுல்லாவின் மனைவி சாஹிரா பானு சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வருகிறார். அப்போது அவருக்கும் அங்குள்ள கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் கணவன் மனைவி போல வாழத் தொடங்கினர். அதனையறிந்த சமியுல்லா, கர்நாடகாவிற்கு வந்துவிடுமாறு பானுவிடம் மன்றாடி கேட்டுக்கொண்டார்.