பெங்களூரு: கர்நாடகா மாநிலம், விஜயநகர் மாவட்டம், குட்லிகியில் உள்ள காவல்நிலையத்தில் இளைஞர் ஒருவர் வெட்டப்பட்ட இளம்பெண்ணின் தலையுடன் நேற்று (ஜூலை 21) சரணடைந்தார். இவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், குட்லிகியை சேர்ந்த போஜராஜ் அதேபகுதியை சேர்ந்த நிர்மலா (23) என்பவரை காதலித்து வந்தார். நிர்மலாவும் காதலித்தாக கூறப்பட்ட நிலையில், போஜராஜ் நிர்மலாவின் பெற்றோரிடம் தங்களுக்கு திருமணம் செய்துவைக்குமாறு கேட்டுள்ளார்.
ஆனால், பெற்றோர் மறுத்துள்ளனர். இதையடுத்து பெற்றோர் நிர்மலாவை பக்கத்து மாவட்டத்திலுள்ள நர்சிங் கல்லூரியில், சேர்த்தனர். கல்லூரியின் ஹாஸ்டலிலேயே தங்க வைத்தனர்.
இதனிடையே போஜராஜ் வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இரண்டு ஆண்டுகள் கழித்து நிர்மலா மீண்டும் சொந்த ஊருக்கு சில நாள்களுக்கு முன்பு வந்தார். இதனையறிந்த போஜராஜ் அவரது வீட்டிற்கு சென்று அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தார். அதோடு துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல்நிலையத்தில் சரணடைந்தார்" என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க:மனைவி மீது சந்தேகம் - 'ஷூ லேசால்' கழுத்தை இறுக்கிக்கொலை!