கர்நாடகா: கர்நாடக மாநிலம், பெங்களூருவில் தானேந்திரா - அனுசுயா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 13 வயதில் மகள் இருக்கிறார்.
தானேந்திரா ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதைத் திருப்பி செலுத்தும்படி அனுசுயா அடிக்கடி சண்டையிட்டு வந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில், நேற்றிரவு வழக்கம்போல் கணவன், மனைவி இடையே சண்டை நடந்துள்ளது.
இதைத் தொடர்ந்து நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த மனைவியை தானேந்திரா கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். பிறகு அவரது சடலத்தின் அருகே இரவு முழுவதும் படுத்து உறங்கியுள்ளார். விடிந்ததும் தாய் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்ட மகள் சத்தமிட்டு அழ ஆரம்பித்துள்ளார்.
இதையடுத்து கண் விழித்த தானேந்திரா தானே போலீசுக்குத் தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தானேந்திராவைக் கைது செய்து, அனுசுயாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தாயின் மரணத்தால் மனதளவில் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமியையும் போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், தானேந்திரா கடன் தொல்லை காரணமாக மனைவியையும் மகளையும் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்ய முயற்சித்ததாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவியை கொலை செய்த தானேந்திரா இதையும் படிங்க:15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - முதியவருக்கு 81 ஆண்டு சிறை தண்டனை