தும்கூரு: கர்நாகடகா மாநிலத்தில் தும்கூரு மாவட்டத்தில் 17 வயது சிறுமி ஒருவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த சிறுவனை காதலித்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்து சிறுமியின் குடும்பத்தினர் ஆத்திரமடைந்து சிறுமியின் குடும்பத்தினரும் உறவினர்களும் இணைந்து சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்து உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:Cyclone Biparjoy Impacts: குஜராத்தை புரட்டிப்போட்ட பிப்பர்ஜாய் புயல் - 22 பேர் காயம், 940 கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு!
இதுகுறித்து போலீசார் கூறியதாவது, "இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி ஒரு விடுதியில் தங்கி இருந்த குமார் என்கிற பழங்குடி இன சிறுவனை காதலித்து வந்துள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு சிறுமி காணாமல் போனதாக புகார் கூறப்பட்டது, ஆனால் அவரது பெற்றோர் சிறுமியைக் கண்டுபிடித்து ஜூன் 9 அன்று வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
பழங்குடி இன சிறுவனுடனான உறவை முறித்துக் கொள்ள சிறுமி சம்மதிக்காததால், ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை பரசுராமன், சகோதரர் சிவராஜூ, மாமா துக்காராம் ஆகியோர் சிறுமியை விஷம் குடிக்கும் படி வற்புறுத்தி உள்ளனர். விஷம் குடிக்க சிறுமி மறுத்ததினால் ஆத்திரம் அடைந்த குடும்பத்தினரும் உறவினர்களும் இணைந்து சிறுமியின் கழுத்தை நெரித்து அவரை கொலை செய்து உள்ளனர்.