தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடக சிறையில் உள் துறை அமைச்சர் ஆய்வு!

பெங்களூரு: கர்நாடக மாநில மத்திய சிறையில் அம்மாநில உள் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கோவிட்-19 நிலைமை குறித்து நேரில் ஆய்வுசெய்தார்.

கர்நாடகா மத்திய சிறை
கர்நாடகா மத்திய சிறை

By

Published : May 2, 2021, 9:37 AM IST

பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறைக்கு கோவிட்-19 நிலைமை குறித்து அம்மாநில உள் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை நேற்று (மே 1) நேரில் ஆய்வுசெய்தார்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கைதிகளுக்குச் சிகிச்சையளிக்க 100 படுக்கைகள் கொண்ட சிறை மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. 240 சிறைக் கைதிகளுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என சிறை அலுவலர்கள் தெரிவித்தனர். 45 வயதுக்கு மேற்பட்ட கைதிகளில் 80 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும், புதிதாக வந்துள்ள கைதிகள் 14 நாள்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட கைதிகளில் சிலர் பெங்களூரு ஹஜ் பவனில் தனிமையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இது குறித்து, பசவராஜ் பொம்மை கூறுகையில், இதற்காக (சிறைக்கு) ரூ.5 கோடி ஒதுக்கப்படும் என்றார். அப்போது, சிறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘இங்கு மேலும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் தேவை’ எனத் தெரிவித்தார்.

பின்னர் பேசிய உள் துறை அமைச்சர், இது குறித்து ‘மெய்நிகர் நீதிமன்றங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்படும்’ என்றார்.

ABOUT THE AUTHOR

...view details