பெங்களூரு:கர்நாடகாவில் ஹிஜாப்-காவி துண்டு அணிவது தொடர்பாக 19 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் முன்பு போராட்டம் நடந்துவருகிறது. இதன்காரணமாக, தலைநகர் பெங்களூருவில் ஹிஜாப்-காவி துண்டு தொடர்பான போராட்டங்களை தவிர்க்க, பெங்களூருவில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை சுற்றி 200 மீட்டருக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த், பெங்களூரு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களின் வாயில்களில் யாரும் போராட்டம் நடத்தக்கூடாது.