டெல்லி:கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கல்வி நிலையங்களில் ஹிஜாப், காவித் துண்டு என மத அடையாளங்களைக் குறிக்கும் உடைகளை அணியத்தடை விதித்த கர்நாடக அரசின் அரசாணை செல்லும் என தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வில், செப்டம்பர் 5ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.