பெங்களூரு :சண்டையின் போது அடுத்தவரின் ஆண் உறுப்பை பிடித்து கசக்குவது கொலை முயற்சியாகாது என கர்நாடக உயர் நீதிமன்றம் வித்தியாசமான தீர்ப்பு வழங்கி உள்ளது.
சிக்மகளூரு மாவட்டம் கடூர் அடுத்த முகலிகட்டே பகுதியைச் சேர்ந்தவர் பரமேஷ்வரப்பா. அதே பகுதியைச் சேர்ந்தவர் ஓம்காரப்பா. கடந்த 2010ஆம் ஆண்டு நரசிம்ம சுவாமி கோவில் திருவிழாவை ஓம்காரப்பா தன் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடிக் கொண்டு இருந்த நிலையில், இரு சக்கர வாகனத்தில் வந்த பரமேஷ்வரப்பா அவருடன் சண்டையிட்டு உள்ளார்.
மேலும் சண்டையின் போது, ஓம்காரப்பாவின் ஆண் உறுப்பை பிடித்து பரமேஷ்வரப்பா கடுமையாகப் பிடித்து கசக்கி உள்ளார். இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஓம்காரப்பா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த போலீசார் பரமேஷ்வரப்பாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது குறித்து விசாரணை சிக்மகளூரு மாவட்ட விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், பரமேஷ்வரப்பாவை நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்தது. மேலும் கொலை முயற்சி உள்ளிட்டப் பல்வேறு பிரிவுகளின் கீழ் பரமேஷ்வரப்பாவுக்கு 8 ஆண்டுகள் 1 மாதம் சிறைத் தண்டனை விதித்து கடந்த 2012ஆம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.