தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ட்வீட் தொடர்பாக கங்கனா மீதான எஃப்.ஐ.ஆர் ரத்து - கர்நாடகா உயர் நீதிமன்றம்

பெங்களூரு: விவசாயிகள் போராட்டம் குறித்து நடிகை கங்கனா பதிவிட்ட ட்வீட் மீதான எஃப்.ஐ.ஆரை, ரத்து செய்யுமாறு கர்நாடகா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Farmers Protest
கங்கனா

By

Published : Mar 26, 2021, 1:03 AM IST

விவசாயிகள் போராட்டம் குறித்து நடிகை கங்கனா பதிவிட்ட ட்வீட்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அவர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் ரமேஷ் நாயக், வழக்குத் தொடர்ந்தார்.

கடந்த 2020 அக்டோபர் 9ஆம் தேதியன்று, அவர் மனுவை விசாரித்த பெங்களூரு நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றம், கங்கனா மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, தும்கூரில் உள்ள கியாடசந்திர காவல் நிலையத்தில் பதிவு செய்துள்ள எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யக்கோரி, கங்கனா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்நிலையில் இன்று(மார்ச்.25) இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, "இந்த உத்தரவு நடைமுறை அம்சங்களிலேயே நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், நீதிபதி முன்பு மனுதாரர் சமர்ப்பித்துள்ள ஆதாரங்களில் சில குழப்பங்கள் உள்ளன. இவ்வழக்கை மீண்டும் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரிக்கப் பரிந்துரைக்கிறேன். மேலும், நீதிமன்ற உத்தரவால் பதியப்பட்ட எஃப்.ஐ.ஆர் ரத்து செய்யப்படுகிறது" எனத் தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க:'பையர் ஹேர் ஸ்ட்ரெயிட்னிங்' காணொலியைப் பார்த்து முயற்சித்த சிறுவன் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details