பெங்களூரு: பிரதமர் நிவாரண நிதி தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்தாண்டு மே 11ஆம் தேதி சில சந்தேகங்களை எழுப்பி ட்வீட் செய்திருந்தார். இந்த ட்வீட்டுக்கு எதிராக வழக்குரைஞர் கேவி பிரவீன் குமார் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள சகாரா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
சோனியா காந்தி மீதான வழக்கில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யாதது ஏன்? மாநில அரசுக்கு நீதிமன்றம் கேள்வி - புகார்
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மீதான வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யாதது ஏன் என்பது குறித்து விளக்கம் கேட்டு மாநில அரசுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
complaint filed against Sonia Gandhi Karnataka HC notices state govt investigation report of complaint filed against Sonia Gandhi சோனியா காந்தி ட்வீட் புகார் பிரதமர் நிவாரண நிதி
இந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்நிலையில் நீதிபதி பிஎஸ் தினேஷ் குமார் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் இறுதி விசாரணை அறிக்கையை காவலர்கள் தாக்கல் செய்யவில்லை.
இதையடுத்து மாநில அரசு மற்றும் சகாரா காவல் நிலையத்துக்கு நோட்டீஸ் அளித்தார். அந்த நோட்டீஸில் விசாரணை அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.