தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்ய வேண்டும்...!’ ; போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை - போக்சோ குற்றவாளிக்கு பிணை

பாதிக்கப்பட்ட சிறுமியை திருமணம் செய்ய வேண்டுமென்ற நிபந்தனையுடன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு கர்நாடகா உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

’பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்ய வேண்டும்...!’ ; போக்சோ குற்றவாளிக்கு பிணை
’பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்ய வேண்டும்...!’ ; போக்சோ குற்றவாளிக்கு பிணை

By

Published : Oct 29, 2022, 3:35 PM IST

பெங்களூரூ: போக்சோ வழக்கில் கைதானவரை பாதிக்கப்பட்ட பெண் திருமண வயதை அடைந்ததும் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற நிபந்தனையுடன் பிணை வழங்கி கர்நாடகா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், திருமணம் செய்த பின்னர், முறையான சான்றிதழ்களை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில், தான் குற்றஞ்சாட்டப்பட்டவரோடு காதல் உறவில் இருந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக அவர் உறுதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டது. அதனை உடலுறவில் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் , அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற நிபந்தனையுடன் அவருக்கு பிணை வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, இந்த நிபந்தனையுடன் பிணை வழங்கப்பட்டது.

குற்றம்சாட்டப்பட்டவரும், சிறுமியும் உறவினர்கள். இவர்கள் இருவரும் சில நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், அச் சிறுமியின் வீட்டில் ஆட்கள் இல்லாத போது உறவிலும் இருந்து வந்துள்ளனர். இதனால் அந்தச் சிறுமி கர்ப்பமானதையடுத்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில், கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: வீடியோ; பற்றி எரிந்த சரக்கு படகுகள் - தீபாவளி பட்டாசு காரணமா?

ABOUT THE AUTHOR

...view details