பெங்களூரு:இதுதொடர்பாக கர்நாடக மாநில அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், ப்ரீ யுனிவர்சிட்டி கல்லூரிகளில் (ஐடி மற்றும் பாலிடெக்னிக்) நாள்தோறும் காலையில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவு உள்ளது. ஆனால், பெங்களூருவில் உள்ள பல்வேறு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படுவதில்லை என்று பள்ளிக்கல்வித்துறைக்கு புகார்கள் வருகின்றன.
பள்ளி, கல்லூரிகளில் தேசிய கீதம் கட்டாயம்
கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நாள்தோறும் காலையில் தேசிய கீதம் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆகவே அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் ஐடி, பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் நாள்தோறும் காலையில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும். இதனை முதன்மை செயலாளர்கள், தலைமையாசிரிகள் உறுதி செய்ய வேண்டும். இந்த உத்தரவு தனியார் பள்ளிகள், ஐடி, பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் பொருந்தும். அதேபோல தேசிய கீதம் பாட மைதானம் இல்லாதபட்சத்தில் வகுப்பறைகளில் பாடிக்கொள்ளலாம். இந்த உத்தரவை பின்பற்றாத பள்ளி, கல்லூரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் - அரசாணை வெளியீடு