பெங்களூரு: கர்நாடக மாநிலம் தக்ஷின கன்னட மாவட்டத்தை சேர்ந்தவர் பிரவீன் நெட்டாரு. இவர் பாஜக மாவட்ட இளைஞரணியில் முக்கிய பொறுப்பை வகித்துவந்தார். இந்த நிலையில் ஜூலை 26ஆம் தேதி இரவு பைக்கில் வந்த அடையாளம் தெரியாத சிலர் அவரை அரிவாள் தாக்கி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
பிரவீன் நெட்டாரு கொலை வழக்கை என்ஐஏவிடம் ஒப்படைக்க முடிவு
பாஜக இளைஞரணி பிரமுகர் பிரவீன் நெட்டாரு கொலை வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
கொலைக்கு காரணமானவர்கள் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏடிஜிபி அலோக் குமார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பிரவீன் நெட்டாரு கொலை திட்டமிட்டு செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதால், வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம். தக்ஷின கன்னட மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கேரள எல்லையிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் என்று அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
இதையும் படிங்க:பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 2 பேர் கைது