பெங்களூரு:கர்நாடகா மாநிலத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அதிக ஒலி ஏற்படுத்தக்கூடிய ஒலிப்பெருக்கிகள் தடைசெய்யப்பட்டுள்ளன. இது குறித்த கர்நாடக அரசின் தகவலில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இனங்க பொது இடங்களில் இரவு நேரங்களில் அதிக ஒலி எழுப்பி பொதுமக்களுக்கு தொந்தரவு தரக்கூடிய வகையில் உள்ள ஒலிபெருக்கிகளை இயக்க இரவு நேரத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிபெருக்கி மற்றும் வேறு சில ஒலி எழுப்பக்கூடிய சாதனங்களுக்கு இரவு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மூடிய அறைகளான அரங்குகள், கருத்தரங்கு மற்றும் மண்டபங்களுக்குள்ளே ஒலிக்கப்படும் ஒலிப்பெருக்கிகளுக்கு விலக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொது நிகழ்ச்சிகளில் 10 டெசிபல் அளவுக்கு மேல் ஒலிபெருக்கிகளிலிருந்து ஒலி எழுப்பக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.