நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையில் மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்வது முக்கிய நிகழ்வாகும். கர்நாடகத்தில் கரோனா பரவி வரும் நிலையில், பட்டாசு வெடிக்கத் தடை விதிப்பதாக முதலமைச்சர் எடியூரப்பா ஏற்கெனவே அறிவித்தார். ஆனால், இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, பசுமைப் பட்டாசு மட்டும் வெடிக்க அனுமதி வழங்கி அரசு உத்தரவிட்டிருந்தது.
உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே பசுமைப் பட்டாசுகளை விற்கலாம் - கர்நாடக அரசு! - கர்நாடகாவில் பசுமை பட்டாசுகள் அனுமதி
பெங்களூரு: அரசு உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே பசுமைப் பட்டாசுகளை விற்பனை செய்யலாம் என்று தீபாவளி வழிகாட்டு நெறிமுறைகளை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடக அரசின் தீபாவளி கொண்டாட்டம் தொடர்பாக, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, 'அரசு உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே பசுமைப் பட்டாசுகளை விற்பனை செய்யலாம். பச்சை பட்டாசுகளில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லாததால், பட்டாசுகளால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் கணிசமாகக் குறைக்கமுடியும். அனைத்து வெடி வகைகளிலும் பசுமைப் பட்டாசுகள் உள்ளன. இந்தப் பட்டாசுகளை அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் - தேசிய சுற்றுச்சூழல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி நிறுவன ஆய்வக வழிமுறைகளைப் பின்பற்றியே தயாரித்து வருகின்றன' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.