பெங்களூரு : கரோனா பாதிப்புகள் குறைந்துவரும் நிலையில் கர்நாடக அரசு இரவு நேர ஊடரங்கை வாபஸ் பெற்றுள்ளது. பெங்களூருவில் பள்ளிகள் (1-9) மற்றும் கல்லூரிகள் திங்கள்கிழமை (ஜன.31) முதல் திறக்கப்படுகின்றன.
இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு மாநில முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் நடந்தது. அப்போது பேசிய வருவாய் துறை அமைச்சர் ஆர். அசோக், “மாநிலத்தில் ஜன.31ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகின்றன” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
தொடர்ந்து, “கோவிட் பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுப்பார்கள்” என்றார். மேலும், “கேரளா, கோவா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கர்நாடகாவுக்கு வந்தால் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயம்” என்றார்.