பெங்களூரு: கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள கடபாவில் இன்று (ஆக 15) சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் முன்னாள் ராணுவ வீரர் கங்காதர கவுடா உள்பட அப்பகுதியின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
தேசிய கொடியேற்றத்தின் போது பிரிந்த முன்னாள் ராணுவ வீரர் உயிர் - முன்னாள் ராணுவ வீரர் உயிர்
கர்நாடக மாநிலத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றிய போது முன்னாள் ராணுவ வீரர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
இந்த கொடியேற்றத்தின்போது கங்காதர கவுடா கொடிக்கு முன்னதாவே திடீரென சுருண்டு விழுந்தார். அதன்பின் அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த மருத்துவமனையில் கவுடாவை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு கங்காதர் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல அப்பகுதி மக்கள் ஏற்பாடு செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க:பிரிவினையின் வலிகளை ஒருபோதும் மறக்க முடியாது.. பிரதமர் மோடி