பெங்களூரு: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் எச்.டி.குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் கிங் மேக்கராக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனடிப்படையில், இன்றைய வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்கியது முதலே காங்கிரசுக்கு சாதகமாக உள்ளது.
Karnataka Results: பாஜகவை முந்தும் காங்கிரஸ்.. மல்லுக்கட்டும் 'புல்லுக்கட்டு' தலைவர் குமாரசாமி.. கர்நாடக தேர்தல் முன்னிலை நிலவரம்! - HD Kumaraswamy
கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி 118 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை வகிக்கிறது. மதசார்பற்ற ஜனதா தளம் 24 தொகுதிகளில் முன்னிலை வகித்த போதும், அதன் தலைவர் எச்.டி.குமாரசாமி பின்னடைவை சந்தித்து வருகிறார்.
![Karnataka Results: பாஜகவை முந்தும் காங்கிரஸ்.. மல்லுக்கட்டும் 'புல்லுக்கட்டு' தலைவர் குமாரசாமி.. கர்நாடக தேர்தல் முன்னிலை நிலவரம்! Etv Bharat](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/1200-675-18491980-thumbnail-16x9-jds.jpg)
Etv Bharat
தற்போதைய நிலவரப்படி மொத்தம் உள்ள 210 தொகுதிகளில் 118 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. பாஜக 70 தொகுதிகளிலும், ஜேடிஎஸ் 29 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. சென்னப்பட்டனா தொகுதியில் எச்.டி.குமாரசாமிக்கு பாஜக வேட்பாளர் யோகேஷ்வரா கடுமையான போட்டியை அளிக்கிறார். இதே போன்று ஷிக்கோன் தொகுதியில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
Last Updated : May 13, 2023, 11:51 AM IST