பெங்களூர்:கர்நாடக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்த 45 வயதான ஒருவர் தினமும் இறை வழிபாடு செய்து வந்துள்ளார். அதேபோன்று வழிபாட்டிற்குப் பிறகு, தீர்த்தம் குடிகும்போது தவறுதலாக சிலையை விழுங்கியுள்ளார். அதன் பிறகு அவருக்கு தொண்டை வலி மற்றும் வீக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர் மருத்துவரை அணுகியுள்ளார்.
டாக்டர் ஒரு எக்ஸ்ரே எடுக்க பரிந்துரைத்துள்ளார். எக்ஸ்ரே ரிப்போர்ட் மூலம் தொண்டையில் கிருஷ்ணர் சிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மேல் சிகிச்சைக்காக பெலகாவியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த நபரின் உணவுக் குழாயில் கிருஷ்ணர் சிலையின் இடது கால் சிக்கியிருப்பதை எண்டோஸ்கோப் மூலம் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.