தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிறுமியை தற்கொலைக்கு தூண்டிய காவலருக்கு ஆயுள் தண்டனை! - Karnataka cop gets life term

சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி, தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் காவலருக்கு ஆயுள் தண்டனை விதித்து தக்‌ஷின் கன்னடா மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Karnataka
Karnataka

By

Published : Oct 21, 2022, 4:21 PM IST

தக்‌ஷின் கன்னடா: கர்நாடக மாநிலம் தக்‌ஷின் கன்னடா மாவட்டத்தில் பாஜ்பே நகரைச் சேர்ந்த காவலர் பிரவீன் சல்யன்(35), கடந்த 2015ஆம் ஆண்டு, மூகநூல் மூலம் 17 வயது சிறுமியுடன் நட்பாகியுள்ளார். பின்னர் அந்த சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி நடித்துள்ளார். சிறுமியிடம் ஆபாசமாகப் பேசுவது, ஆபாசமான புகைப்படங்களை அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். ஆபாசமாகப் பேசும்படி அந்த சிறுமியையும் தூண்டியுள்ளார். மேலும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் அல்லது தங்க நகைகளைக் கேட்டு மிரட்டியுள்ளார்.

சல்யனின் தொந்தரவுகள் தாங்க முடியாத சிறுமி, தனது சாவுக்குக் காரணம் சல்யன்தான் என எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் வெளியே வந்ததையடுத்து, காவலர் சல்யன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சிறுமியைத் தற்கொலைக்குத் தூண்டியது, பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சல்யன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று(அக்.21) இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சிறுமியைத் தற்கொலைக்குத் தூண்டிய காவலர் சல்யனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதையும் படிங்க: பார்க்கிங் தகராறில் 42 வயது நபருக்கு துப்பாக்கிச்சூடு

ABOUT THE AUTHOR

...view details