டெல்லி : டெல்லி ஜன்பாத்தில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் அவரை செவ்வாய்க்கிழமை (அக்.5) மதியம் 12 மணிக்கு கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான சித்த ராமையா சந்தித்து பேசினார்.
இந்தச் சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. சந்திப்பை தொடர்ந்து சித்த ராமையா செய்தியாளர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.
கர்நாடக முன்னாள் முதலமைச்சரான சித்த ராமையா, “தேசிய அரசியலில் நாட்டமில்லை, கர்நாடக மக்களாக தொடர்ந்து உழைப்பேன்” எனக் கூறிவருகிறார்.
இருப்பினும் அவரை தேசிய அரசியலுக்கு இழுக்கும் பணிகளும் நடைபெற்றுவருகின்றன. ஏனெனில் காங்கிரஸில் மூத்தத் தலைவர்கள் ஒரங்கட்டப்பட்டுவருகின்றனர் என்ற குற்றஞ்சாட்டு எழுந்துவருகிறது. இதற்கு மத்தியில் சித்த ராமையா தேசிய அரசியலில் ஈடுபடும்பட்சத்தில் அது ராகுல் காந்தியின் கரங்களுக்கு வலு சேர்ப்பதாய் அமையும்.