ஹைதராபாத் : கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடக முதலமைச்சராக பி.எஸ். எடியூரப்பா இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளார்.
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ராஜினாமா?
12:45 July 22
கடந்த முறையை போல் இம்முறையும் முதலமைச்சர் நாற்காலியுடன் எடியூரப்பா மல்லுகட்டிவருகிறார். அவருக்கு உள்கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமைச்சர்கள் சிலர் வெளிப்படையாகவே எடியூரப்பாவுக்கு எதிராக பேசிவருகின்றனர்.
இதை முன்னிட்டு வருகிற 25ஆம் தேதி அனைத்து கட்சி நண்பர்களும் விருந்து ஒன்றிற்கும் பி.எஸ். எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளார். அதன்பின்னர் அவர் ராஜினாமா செய்யப்போகிறார் என்றும் தகவல்கள் வெளியாகின.
அதாவது, வருகிற 26ஆம் தேதி முதலமைச்சர் பதவியை எடியூரப்பா ராஜினாமாசெய்யப்போகிறார் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை எடியூரப்பா கடந்த வாரம் டெல்லியில் சந்தித்தார்.
அதன் பின்னர் அவரது ராஜினாமா தொடர்பாக பல்வேறு யூகங்கள் வெளியாகி அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகின்றன.
இதையும் படிங்க : இல்லை.. இல்லவே இல்லை... எடியூரப்பா!