கர்நாடகாவில் உள்ள மேகதாதுவில் காவிரிக்கு குறுக்கே அணை கட்டும் பணிகளை கர்நாடாக அரசு மும்முரமாக மேற்கொண்டு வருகிறது.
இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அண்மையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் அணை கட்டக்கூடாது என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, தமிழ்நாடு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங்கை இன்று (ஜூலை.15) டெல்லியில் சந்திக்கின்றனர்.