கடந்த 16ஆம் தேதி (ஏப்ரல் 16) அன்று எடியூரப்பாவுக்கு கரோனா பாதிப்பு உறுதியான நிலையில் பெங்களூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்கனவே கோவிட் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்த எடியூரப்பாவுக்கு இரண்டாம் முறை பாதிப்பு ஏற்பட்டது.
கரோனா பாதிப்பு - சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் எடியூரப்பா - எடியூரப்பாவுக்கு கரோனா பாதிப்பு
இரண்டாவது முறையாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, குணமடைந்து வீடு திரும்பினார்.
BS Yeddyurappa
இந்நிலையில் ஒரு வார மருத்துவ சிகிச்சைக்குப் பின், அவர் பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதையடுத்து இன்று (ஏப்ரல் 22) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளார்.
இன்னும் சில நாட்கள் வீட்டிலேயே எடியூரப்பா முழு ஓய்வு எடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.