நாட்டில் கடந்த சில வாரங்களாக கரோனா, ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் ஒரேநாளில் ஒரு லட்சத்து 79 ஆயிரம் பேருக்குப் புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "எனக்கு லேசான அறிகுறிகளுடன் கோவிட்-19 பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.