தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ராஜினாமா - congress

கர்நாடக முதலமைச்சரும் பாஜக முக்கியத் தலைவருமான பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்துள்ளார்.

கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை ராஜினாமா
கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை ராஜினாமா

By

Published : May 13, 2023, 10:47 PM IST

பெங்களூரு:கர்நாடகா மாநிலத்தில் உள்ள 224 சட்ட மன்றத்தொகுதிகளுக்கும் கடந்த மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று மே 13ம் தேதி எண்ணப்பட்டன. இதில் 136 தொகுதிகளைக் கைப்பற்றிய காங்கிரஸ் இந்த தேர்தலில் அமோக வெற்றிபெற்றது உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக 65 தொகுதிகளை மட்டும் கைப்பற்றி, படுதோல்வி அடைந்தது.

இதையடுத்து கர்நாடக முதலமைச்சரும், பாஜக முக்கியத் தலைவருமான பசவராஜ் பொம்மை தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டிடம் அளித்துள்ளார். இதனால், ஆளுநர் நாளை காங்கிரஸ் தரப்பினரிடம் முதலமைச்சராகப் பதவியேற்க அழைப்பு விடுக்கலாம் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க:இந்திரா காந்திக்கு மட்டுமல்ல காங்கிரசுக்கும் ComeBack கொடுத்த தொகுதி! எது தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details