கர்நாடக மாநிலத்தில் காலியாகயிருந்த ராஜராஜேஸ்வரி நகர், சீரா சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதற்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் 10ஆவது சுற்றில் கிடைத்த வாக்கு எண்ணிக்கையின்படி, பாஜகவைச் சேர்ந்த முனி ரத்னா 55 ஆயிரத்து 103 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்துப்போட்டியிட்ட காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி வேட்பாளர்களை விட முன்னிலை வகித்தார். சீரா சட்டப்பேரவைத் தொகுதியில் 8ஆவது சுற்றில் கிடைத்த வாக்கு எண்ணிக்கையின்படி பாஜகவைச் சேர்ந்த டாக்டர் ராஜேஷ் கெளடா 24ஆயிரத்து 300 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார்.
கர்நாடக இடைத்தேர்தலிலும் பாஜக மீண்டும் முன்னிலை - ராஜேஷ் கெளடா 24ஆயிரத்து 300 வாக்குகள் பெற்று முன்னிலை
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக மீண்டும் முன்னிலை வகிக்கிறது.
Karnataka Bypoll Result : BJP Leads
கர்நாடகாவில் நடந்த முடிந்த 2 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பாஜக தொடர்ந்து முன்னிலை பெற்றதையடுத்து, அம்மாநில முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா, பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் சக அமைச்சர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகளுடன் இனிப்புகளைப் பரிமாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க: மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைத்தது பாஜக #MadhyaPradeshBypolls