தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மேகதாது அணையைக் கட்ட கர்நாடக அரசு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு

மேகதாது அணை கட்டுமானத்துக்கு கர்நாடக அரசு நிதிநிலை அறிக்கையில் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

மேகதாது அணையைக் கட்ட கர்நாடக அரசு ரூ.1000 கோடி ஒதுக்கீடு
மேகதாது அணையைக் கட்ட கர்நாடக அரசு ரூ.1000 கோடி ஒதுக்கீடு

By

Published : Mar 4, 2022, 11:04 PM IST

கர்நாடக மாநிலம், மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதனால் தமிழ்நாட்டுக்கு வரும் காவிரி நீர் வரத்து மிகவும் பாதிப்படையும். எனவே, தமிழ்நாடு அரசு இதை எதிர்த்து வருகிறது. இது குறித்து பல முறை ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு புகார் அளித்து வருகிறது.

இருப்பினும், கர்நாடக அரசு மேகதாதுவில் அணையைக் கட்ட தீவிரமாக உள்ளது. இந்நிலையில், இன்று (மார்ச் 4) கர்நாடக மாநிலத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஒன்றிய அரசிடம் தேவையான அனுமதி பெற்று, அதன்பிறகு மேகதாது அணை கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இதுவரை ஒன்றிய அரசு மேகதாது அணை கட்டுமானத்துக்கு அனுமதி அளிக்காத நிலையில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுமானப் பணிகளுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்ததால், தமிழ்நாடு விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:கும்பகோணத்தில் மேயரான ஆட்டோ ஓட்டுநர்!

ABOUT THE AUTHOR

...view details