பெங்களூரு: கர்நாடக மாநிலம் நாராவி நகரில் இன்று (மே 28) நடைபெற்ற திருமண விழாவில், மணமக்கள் இருவரும் மாலை மாற்றும்போது, மணமகனின் கை மணப்பெண்ணின் கழுத்தில் பட்டதாக கூறப்படுகிறது. அப்போது மணமகனின் தீண்டல் தவறாக உள்ளதெனக்கூறிய மணப்பெண், திடீரென மாலையை தூக்கி எறிந்துவிட்டு, மண மேடையை விட்டு கீழே இறங்கியுள்ளார். அவரது குடும்பத்தினர் மணமகளை சமாதானப்படுத்தியுள்ளனர்.
மாலை மாற்றும்போது மாப்பிள்ளை செய்த காரியம்... மாலையை தூக்கிவீசிவிட்டு மண்டபத்தை விட்டு வெளியேறிய மணப்பெண்... - திருமணம் திருத்தம்
திருமணத்தில் மாலை மாற்றும்போது, மாப்பிள்ளையின் கை தனது கழுத்தில் பட்டதால் ஆத்திரமடைந்த மணப்பெண், மாலையை தூக்கி எறிந்துவிட்டு, மண்டபத்தை விட்டே வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Karnataka
ஆனால், மணப்பெண் ஆத்திரத்தில் மண்டபத்தை விட்டே வெளியேறிவிட்டார். மணப்பெண்ணின் இந்த நடவடிக்கை மாப்பிள்ளை வீட்டாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்த முடிவெடுத்தனர். இதையறிந்த மணப்பெண் திருமணத்திற்கு செலவழித்த பணத்தை மணமகன் வீட்டார் திருப்பி தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
TAGGED:
Drama at Karnataka wedding