தேவனஹள்ளி (பெங்களூரு): கர்நாடக மாநிலம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்த இண்டிகோ விமானத்தின் பயணிகள் இருக்கைகள் டிஸ்யூ பேப்பரில் எழுதிய வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தை விமான ஊழியர்கள் கைப்பற்றினர். மிரட்டல் கடிதம் குறித்து விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பாதுகாப்பு மற்றும் வெடிகுண்டு சோதனை கருவிகளுடன் சென்ற அதிகாரிகள், விமானம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின் முடிவில் மிரட்டல் கடிதம் போலி என்பது தெரிய வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து பேசிய போலீசார், கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்சின் 6E 379 விமானம் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.