கர்நாடகா: மாண்டியா, மாவட்டம் மாலவள்ளி பகுதியைச் சேர்ந்தவர், நஞ்சையா. 46 வயதான நஞ்சையா நாடகத் தொழில் செய்து வருகிறார். பாந்தூர் கிராமத்தில் உள்ள பசவனா கோயிலில் நாடக நிகழ்ச்சி நடத்தி உள்ளார். குருசேத்திரன், கிருஷ்ண சந்தனா என்ற நாடகத்தில் சார்தகி என்ற கதாபாத்திரத்தில் நஞ்சையா நடித்துக் கொண்டு இருந்தார்.
நாடக மேடையில் நின்ற நஞ்சையாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மேடையிலேயே சுருண்டு விழுந்தார். சக கலைஞர்கள் மற்றும் பார்வையாளர்கள் நஞ்சையாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.