தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

80 வயது தாயை கோயிலில் தவிக்க விட்டுவிட்டு தப்பியோடிய மகன் - கர்நாடகாவில் நடந்த இரக்கமற்ற சம்பவம்! - தாயை திட்டமிட்டு தொலைத்த மகன்

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது 80 வயது தாயை கர்நாடகாவில் உள்ள ஒரு கோயிலில் தவிக்க விட்டுவிட்டு தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

mother
mother

By

Published : Aug 4, 2022, 8:59 PM IST

கொப்பல்(கர்நாடகா): கடந்த சில நாட்களுக்கு முன்பு நபர் ஒருவர், கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள ஹுலிகெம்மா தேவி கோயிலுக்கு, தனது 80 வயது தாயுடன் வந்துள்ளார்.

கோயிலில் சாமி தரிசனம் முடிந்தபிறகு, தாயை கோயிலிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டதாகத் தெரிகிறது. நீண்ட நேரமாக அந்த மூதாட்டி கோயிலிலேயே இருப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் விசாரித்தபோது, அவரது பெயர் காசிம் என்றும், மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜயினியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு தன்னை அழைத்துவந்த மகன் இங்கு விட்டுச்சென்றதாகவும், கையில் ஒரு செல்போனையும், தொடர்பு எண்ணையும் எழுதிக்கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். செல்போனை சோதித்தபோது, அதில் சிம்கார்டு இல்லை என்பதும், தொடர்பு எண்ணை எழுதாமல் ஒரு வெற்றுத் தாளை தாயிடம் கொடுத்துவிட்டு, மனிதாபிமானமற்றமுறையில் அந்த மகன் திட்டுமிட்டு தாயை தொலைத்துச்சென்றதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து மூதாட்டிக்கு உணவும், தூங்குவதற்கு படுக்கையும் தந்துள்ளனர். பிறகு முதியோர் நலத்துறை அலுவலர்கள் உதவியோடு மூதாட்டியை மீட்டு, முதியோர் இல்லத்தில் சேர்த்தனர்.

இதையும் படிங்க:இளைஞரை கொடூரமாக கொலை செய்த கும்பல் - பதறவைக்கும் சிசிடிவி

ABOUT THE AUTHOR

...view details