தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கார்கில் வெற்றி கொண்டாட்டம்! - கார்கில் வெற்றி

ஜம்மு காஷ்மீரில் முன்னாள் ராணுவ வீரர்கள், வீரத்தீர செயல் விருது வென்ற வீரர்கள், ராணுவ வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் பொதுமக்கள் என பலரும் கார்கில் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Kargil Vijay Diwas
Kargil Vijay Diwas

By

Published : Jul 26, 2021, 10:08 AM IST

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில், ஆபரேஷன் விஜய்யின் வரலாற்றை விவரிக்கும் ஒரு சிறப்பு நிகழ்வு ராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்போது கார்கில் போர் குறித்து விவரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வீரத்தீர விருது வென்றவர்கள் மற்றும் கார்கில் போர் வீராங்கனைகளின் குடும்பங்கள் உள்பட பல ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்திய இராணுவத்தின் வீரம் மிக்க படையினர் அடைந்த துணிச்சலான சாதனையை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி இருந்தது.

இந்த நிகழ்வில் கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த இந்திய வீரர்கள் 559 பேரின் நினைவாக அவர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

1999ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற கார்கில் போரில் பயங்கரவாதிகள், பாகிஸ்தான் வீரர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : கார்கில் நாயகனுக்கு 2ஆம் ஆண்டு நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை!

ABOUT THE AUTHOR

...view details