உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது ஒன்றிய இணையமைச்சரின் மகன் கார் ஏற்றியதில் நான்கு விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
லக்கிம்பூர் வன்முறை... உறங்குகிறதா உச்ச நீதிமன்றம் - கபில் சிபல் காட்டம் - லக்கிம்பூர் வன்முறை
டெல்லி: லக்கிம்பூர் வன்முறையை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்காததற்கு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
kapil sibal
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான கபில் சிபல் தனது ட்விட்டர் பக்கத்தில், “யூடியூப், சமூக வலைதளங்கள் இல்லாத ஒரு காலம் இருந்தது.
அப்போது, உச்ச நீதிமன்றம் அச்சு ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் தாமாகவே செயல்பட்டது. அது குரலற்றவர்களின் குரலைக் கேட்டது. இன்று நமது குடிமக்கள் கொல்லப்படுகிறார்கள். உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.