ஹரியானாவில் தனியார்துறையில் மண்ணின் மைந்தர்களுக்கு 75 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு அம்மாநில ஆளுநர் சத்யதேவ் நாராயண ஆர்யா ஒப்புதல் வழங்கினார். இதன்மூலம், மாத ஊதியம் 50,000க்கு குறைவாக இருக்கும் பணியிடங்களில் 75 விழுக்காடு ஹரியானா மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் 10 ஆண்டுகளுக்கு பயன்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் துறையில் 75 விழுக்காடு இட ஒதுக்கீடு - மோடி முதல் கட்டார் வரை விமர்சித்த கபில் சிபல்! - கபில் சிபல்
டெல்லி: ஹரியானாவில் தனியார் துறையில் மண்ணின் மைந்தர்களுக்கு 75 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு அம்மாநில ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், பிரதமர் மோடியும். முதலமைச்சர் கட்டாரும் குறுகிய மனம் படைத்தவர்கள் என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் விமர்சனம் செய்துள்ளார்.
இருப்பினும், மண்ணின் மைந்தர்களுக்கான இட ஒதுக்கீட்டு சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என பல்வேறு தரப்பினர் கூறிவருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், "இது அரசியலமைப்பின்படி ஆபத்தானது. பிற்போக்கானது, நடைமுறைக்கு ஒவ்வாதது. இச்சட்டம் அரசின் தேவையற்ற கட்டுப்பாடுகளுக்கு வழிவகுக்கும்.
பறந்த மனப்பான்மை குறித்து பேசும் மோடி, குறுகிய மனதோடு செயல்படுகிறார். ஹரியானா முதலமைச்சர் கட்டார், பேசுவது செயல்படுவது இரண்டிலும் குறுகிய எண்ணம் படைத்தவர்" என குறிப்பிட்டுள்ளார்.