கர்நாடகா:கன்னடத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் விஜய் ராகவேந்திரா(44). இவரது மனைவி ஸ்பந்தனா(38). ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி பிகே சிவராமின் மகளான ஸ்பந்தனாவும், நடிகர் விஜய் ராகவேந்திராவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2007ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார்.
அண்மையில் ஸ்பந்தனா தனது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக்கிற்கு சுற்றுலா சென்றிருந்தார். இந்த நிலையில், நேற்று(ஆகஸ்ட் 6) இரவு ஸ்பந்தனா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென ரத்தம் அழுத்தம் குறைந்து குறைந்து மாரடைப்பு ஏற்பட்டு ஸ்பந்தனா உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்பந்தனாவின் அகால மரணம் அவரது குடும்பத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஸ்பந்தனாவின் உடல் நாளை பெங்களூரு கொண்டுவரப்படும் என்றும், அதன் பிறகு இறுதிச்சடங்குகள் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்பந்தனாவின் தந்தை மற்றும் நடிகர் விஜய் ராகவேந்திராவின் குடும்பத்தினர் பாங்காக் சென்றுள்ளதாக தெரிகிறது.