பெங்களூரு:கன்னட சின்னத்திரை நடிகை சேத்தனா ராஜ் (21) என்பவர், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொழுப்பினை நீக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின்னர் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.
சேத்தனா ராஜ் மருத்துவமனையில் நேற்று (மே 16) காலை அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். அறுவை சிகிச்சைக்குப் பின்னர், மாலையில் அவரது நுரையீரல் பகுதியில் கொழுப்பு சேரத் தொடங்கியுள்ளது.
இதன்பின்னரே, அவரின் உடல்நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவரின் கவனக்குறைவால் அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.